கோவையில் பாஜக  மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டுகளில்  மர்ம நபர்கள் பெட்ரோல் குணடுகளை வீதி தாக்குதல் நடத்தினர்... இரு இடங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரிபுராவில் சிபிஎம் தோற்று அங்கு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது அங்கு இருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இன்று திரிபுராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் பெரியார் சிலை என தெரிவித்திருந்தார்.

இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் பதிவிட்ட அன்றே பல்லடத்தில் உள்ள பெரியார் சிலை வேதப்படுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக கோவை பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றும் பெரியார் விலை தலை உடைக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரவித்தனர்.

இந்நிலையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டில் மர்ம நபர்கள் சலிர் நேற்று நள்ளிரவு திடீரென பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதில் அவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இனோவா கார் சேதமடைந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை - செல்வபுரத்தில் உள்ள இந்து முன்னணி பிரமுகம் உமாபதி என்பவரின் வீட்டிலும்  இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்களால் பரபரப்பு நிலவி வருகிறது.