Asianet News TamilAsianet News Tamil

ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க உத்தரவு... கதி கலங்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்..!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. 
 

Court order to detain PC Chidambaram in Tihar jail
Author
India, First Published Sep 5, 2019, 5:45 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவை அடுத்து அவர் வரும் 19ம் தேதி வரை அதாவது 15 நாட்கள் வரை அவர் திஹார் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தான் செல்லத்தயாராக இருப்பதாக சிதம்பரம் தரப்பு கோரிய நிலையிலும் திஹார் சிறையில் அடைக்கப்பட உள்ளார். Court order to detain PC Chidambaram in Tihar jail

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ப.சிதம்பரத்தை கடந்த 20-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 முறையாக மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

Court order to detain PC Chidambaram in Tihar jail

இந்நிலையில், காவல் இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. ஆனால், சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது, சாட்சிகளை கலைக்கவில்லை எனவே நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது என வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். 

அரசு தரப்பில் வாதிட்ட துஷார் மேத்தா சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். மேலும், சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிக்காத வரை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி எனவும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.Court order to detain PC Chidambaram in Tihar jail

எனக்கு எதிராக ஆதாரங்களும் இல்லாத நிலையில் எந்த ஆதாரத்தை கலைக்கப்போகிறேன்? என ப.சிதம்பரம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. நீதிமன்ற காவலுக்கான காரணங்களை சிபிஐ முன் வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனிடையே, அமலாக்கத்துறை அலுவலகத்தில் சரணடைய தயார் என ப.சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  திஹார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios