அதிமுக பொதுசெயலாளர் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.. இபிஎஸ் கூறிய பரபரப்பு தகவல்..!

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக முன்னாள் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

court did not ban the AIADMK general secretary election... Edappadi palanisamy

அதிமுக பொது செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கப்படவில்லை கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக முன்னாள் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி;- கொரோனா காலத்தில் இருந்து பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து, தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இதையும் படிங்க;- அமமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய எடப்பாடியார்.. அதிர்ச்சியில் பாஜக..!

court did not ban the AIADMK general secretary election... Edappadi palanisamy

இந்நிலையில், திமுக ஆட்சியல் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் நிம்மதியாக இல்லை. துன்பமும் வேதனையும் அனுபவித்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி வாக்குறுதிகளை அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை நீட் தேர்விற்காக எதுவும் செய்யவில்லை, எந்த போராட்டமும் நடத்தவில்லை.

court did not ban the AIADMK general secretary election... Edappadi palanisamy

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடியும் வரை பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று உத்தரவாதம் கொடுக்க நீதிபதி கூறியதாகவும் தடை பிறப்பிக்கப்படவில்லை. விசாரணை முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம் என  எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுக உள்விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு எல்லா உரிமையும் உள்ளது.. எடப்பாடியை ஜர்க் ஆக்கிய வைத்தியலிங்கம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios