Asianet News TamilAsianet News Tamil

சி.சி.டிவி வளையத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை... அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்..!

17-வது லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை தெரிந்துவிடும். அதற்கான ஏற்பாடுகளை ஜருராக செய்து வருகிறது தேர்தல் ஆணையம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அமைதியான வாக்கு பதிவை போல வாக்கு எண்ணிக்கையும் அமைதியாக நடக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் திட்டமிட்டு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

Counting of votes in the CCTV ring
Author
Tamil Nadu, First Published May 22, 2019, 3:24 PM IST

17-வது லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை தெரிந்துவிடும். அதற்கான ஏற்பாடுகளை ஜருராக செய்து வருகிறது தேர்தல் ஆணையம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அமைதியான வாக்கு பதிவை போல வாக்கு எண்ணிக்கையும் அமைதியாக நடக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் திட்டமிட்டு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறது. Counting of votes in the CCTV ring

இதில் சில புதிய தொழில்நுட்பத்தையும் இம்முறை ஆணையம் புகுத்தியுள்ளது. அதற்கு உதாரணமாக வாக்கு எண்ணும் போது முழுமையாக சி.சி.டிவி கேமராவில் பதிவாக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் சத்யபிரதா சாகு,"  தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். Counting of votes in the CCTV ring

வாக்கு எண்ணிக்கையை 88 பார்வைளாளர்கள் கண்காணிக்க உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் சேர்த்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.  Counting of votes in the CCTV ring

ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும் வர 30 நிமிடங்கள் வரை ஆகும். தேர்தல் முடிவுகளை ஓட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலம் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்"என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios