Asianet News TamilAsianet News Tamil

மு.க.அழகிரி பெயரைக் உச்சரித்து பதவி ஏற்ற கவுன்சிலர்...?மாநகராட்சி கூட்டத்தில் திமுகவினர் அதிர்ச்சி...!

தமிழகம் முழுவதும் கவுன்சிலர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் பல்வேறு இடங்களில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்றது.

councilor swearing in after pronouncing m k alagiri name
Author
Tamil Nadu, First Published Mar 2, 2022, 11:16 AM IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
மொத்தமாக உள்ள 21 மாநகராட்சிகளையும்,132 நகராட்சிகளையும், 455 பேரூராட்சிகளிலும்  திமுக  கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில். தமிழகம் முழுவதும் வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவானது அந்த அந்த அலுவலகங்களில்  இன்று நடைபெற்றது.  சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகராட்சி அலுவகம் உள்ள ரிப்பன் கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.  சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகளில் திமுக  வெற்றி பெற்று  தனிப்பெரும்பான்மையுடன் சென்னை மாநகராட்சி கைப்பற்றியுள்ளது. பதவி ஏற்பு விழாவில்  பல்வேறு வித்தியாசமான சம்பவங்களில் ஈடுபட்டு கவுன்சிலர்கள் பதவியேற்று கொண்டனர்.  சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர் அமிர்தா வர்ஷினி பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை பொதுமக்களிடம் சென்றடையிம் வகையில் அரசு  பேருந்தில் இலவசமாக பயணம் செய்து மாநகராட்சி அலுவலகம் வந்தார். இதே போல ராமநாதபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்கள் 12 பேரும் ஒரே கலர் சேலையில் வந்து கலக்கினர். நெல்லை மாநகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 30 கார்கள் புடைசூழ 5 டெம்போ வாகனங்களில் அனைத்து திமுக கவுன்சிலர்களும் பதவியேற்க ஒன்றாக வந்தனர். பெரும்பாலான இடங்கில் தங்களது குழந்தைகளையும் கணவர்களோடும் வந்து பெண் கவுன்சிலர்கள் பதவியேற்றுகொண்டனர். 

councilor swearing in after pronouncing m k alagiri name

மதுரை மாநகராட்சியை பொருத்தவரைக்கும் 100 வார்டுகளில்  திமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 80 இடங்களையும்,  அதிமுக 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்தநிலையில் மதுரை மாநகராட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது திமுக உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை கூறியும், அதிமுகவினர் ஜெயலலிதா மற்றும் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரை கூறி பதவியேற்றுக்கொண்டனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில்  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி பெயரை உச்சரித்து வெற்றி பெற்ற  பானு என்ற  அந்த மாமன்ற உறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டார். இவர்  மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில்  47வது  வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர்  முக அழகிரியின் தீவிர ஆதரவாளரான முபாரக் மந்திரியின்  மனைவி பானு  ஆவார். தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதனையடுத்து பதவியேற்ற பானுவிற்கு மற்ற கவுன்சிலர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்து கொண்டனர். இதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதவியேற்ற கவுன்சிலர்கள் மக்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்....

Follow Us:
Download App:
  • android
  • ios