அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவியை தனியார் விடுதியில் வைத்து பலமுறை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோவில் கைதான பரமக்குடி அதிமுக நகர அவைத்தலைவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவியை தனியார் விடுதியில் வைத்து பலமுறை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் மற்றும் பரமக்குடி நகர் மன்ற உறுப்பினருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனத் தலைவர் புதுமலர் பிரபாகர், ரெடிமேட் கடை நடத்தி வரும் ராஜா முகமது மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ள பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

