ஊழல் திலகங்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என மக்கள் நீதிமன்ற தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளது ட்விட்டரில் #நான்_கேட்பேன் என ட்ரெண்டாகி வருகிறது. 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்தற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் எழுதிய மொட்டை கடுதாசி அடிப்படையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சகாயம் தொடங்கி சந்தோஷ் பாபு வரை இவர்களால் வேட்டையாடபட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒருவர் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன். இந்த ஊழல் திலகங்களை ஓடஓட விரட்ட வேண்டும்’’என ட்விட்டரில் போடப்பட்டுள்ள வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். 

இதனை வைத்து ட்விட்டர் பக்கத்தில் #நான்_கேட்பேன் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரண்டாக்கி வருகின்றனர்.  '’பத்து நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அதைப்பற்றி #நான்_கேட்பேன் என்று  பேச வாய் வரவில்லை உங்களுக்கு? இத்தனை நாள் கழித்து இப்பொழுது எதற்கு இவர் மீது திடீர் அக்கறை? இப்பொழுதுதான் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது போல?’’ நீங்கள் பாஜகவின் பி டீமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.