Asianet News TamilAsianet News Tamil

அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல்.. விசாரிக்க தனிப்பிரிவு அமைப்பு... அதிரடி தகவலை சொன்ன அமைச்சர்.!

அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. அதை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

Corruption in all sectors of the AIADMK regime .. Private organization to investigate ... Minister who said action information.!
Author
Madurai, First Published Aug 1, 2021, 9:29 PM IST

மதுரையில் பி.மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா மூன்றாம் அலையைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கிவிட்டது. மதுரை மாவட்ட நகர்ப்புறம், கிராமப்புறங்களில் வாகனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள மதுரை மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு மக்கள் அதிகமாகக் கூடுவார்கள். பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.Corruption in all sectors of the AIADMK regime .. Private organization to investigate ... Minister who said action information.!
இரண்டாம் அலையின்போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகம் இருந்தது. மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறப்பட்டு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு செலுத்தப்படுகிறது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரர்களிடம் தெரிவித்துள்ளனர். பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. அதை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

Corruption in all sectors of the AIADMK regime .. Private organization to investigate ... Minister who said action information.!
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப் பதிவுத்துறையில் சீர்திருத்தங்கள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. திமுக ஆட்சியில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்கிறபோது, தவறு செய்யும் அதிகாரிகள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். சிலர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இதில் சில பத்திரிக்கைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன. அந்தப் பத்திரிக்கைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios