Asianet News TamilAsianet News Tamil

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை.. மாஸ் காட்டிய முதல்வர் எடப்பாடி

தனியார் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

CoronaVirus Treatment fo cm Insurance scheme in Private Hospitals...edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Jun 4, 2020, 4:26 PM IST

தனியார் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா தொற்றுக்கு, இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து சுகாதார செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 

CoronaVirus Treatment fo cm Insurance scheme in Private Hospitals...edappadi palanisamy

இக்குழு, தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய அறிக்கையை அளித்துள்ளது. அதனடிப்படையில் கீழ்கண்ட கட்டணங்களை நிர்ணயித்து அரசு ஒப்புதல் அளித்தது. 

1. அதன்படி, (பொது வார்டு) அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு ரூ. 5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2. அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம்கிரேடு ஏ1, ஏ2 - ரூ. 10,000 முதல்- ரூ. 15,000 வரைகிரேடு ஏ3, ஏ4 - ரூ. 9000 முதல் - ரூ. 13,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்;-

* அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும்

* முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.

* நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

* மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்து பயன் பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios