Asianet News TamilAsianet News Tamil

இரவு, பகல் பாராமல் மக்களுக்கு பணியாற்றி வரும் ஆளும் அதிமுக அரசு.. கொரோனா நிவாரண தொகை எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் நிதியுதவி அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே, திமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நிதியுதவி அளித்த நிலையில் தற்போது அதிமுக நிவாரண நிதியை அறிவித்துள்ளது. 

coronavirus in Tamil Nadu: AIDMK to donate Rs 1 crore to CM relief fund
Author
Tamil Nadu, First Published Apr 4, 2020, 12:30 PM IST

கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக  அதிமுக சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் நிதியுதவி அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே, திமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நிதியுதவி அளித்த நிலையில் தற்போது அதிமுக நிவாரண நிதியை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து  கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக மக்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், நோயுற்றோருக்கு சிகிச்சையும், நிவாரணமும் அளிப்பதற்காகவும் அதிமுக அரசு இரவு, பகல் பாராமல் சுற்றிச் சுழன்று சிறப்பாக பணியாற்றிவரும் இந்த நேரத்தில், அரசின் கோரிக்கையை முழுமனதோடு ஏற்று, கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

coronavirus in Tamil Nadu: AIDMK to donate Rs 1 crore to CM relief fund

இயற்கை பேரிடர் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் மக்களின் தேவைகளை அறிந்து கண்ணும், கருத்துமாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிமுகவும், அரசும் கொரோனா நோய் தொற்று பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும், ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில் மக்களுக்கு உரிய பணிகளை ஆற்றவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பல நிலைகளிலும், வடிவங்களிலும் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

coronavirus in Tamil Nadu: AIDMK to donate Rs 1 crore to CM relief fund

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் எனவும், கொரோனா நோய் தடுப்பு மற்றும் தேதி: 4.4.2020 மருத்துவ வசதிகளை அளிப்பதற்கான சிறப்பு நிதிக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 1 கோடி ரூபாயையும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 25 லட்சம் ரூபாயையும் வழங்குவார்கள் எனவும் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus in Tamil Nadu: AIDMK to donate Rs 1 crore to CM relief fund

அதிமுக உடன்பிறப்புகள் தங்களால் இயன்ற உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் மக்களுக்கு செய்து வருகின்றனர். கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காட்டிய பாதையில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற உணர்வோடு கழகப் பணிகளும், மக்கள் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios