Asianet News TamilAsianet News Tamil

கோட்டைவிட்ட அரசு... கிராமங்களில் கம்பீரமாக நுழைந்த கொரோனா.. அலறி துடிக்கும் கமல்ஹாசன்..!

தமிழகத்தின் கிராமப்புறங்களில் வேகமாக பரவும் தொற்று கவலை அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

coronavirus entry in villages...kamal haasan
Author
Tamil Nadu, First Published Jul 11, 2020, 5:40 PM IST

தமிழகத்தின் கிராமப்புறங்களில் வேகமாக பரவும் தொற்று கவலை அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது.

coronavirus entry in villages...kamal haasan

நகரங்களில் பரவலான ஆய்வுகள் மூலம் நோய்த்தொற்று இருப்பதை ஆராயும் அரசு, கிராமப்புறங்களின் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும். நோய்த்தொற்று கண்டறிதல், அதற்கான சிகிச்சைகள், அதுகுறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் கிராமங்களில் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் வந்திருப்பதற்கு காரணமே கிராமங்களை அரசு இத்தனை நாள் கண்டுகொள்ளாமல் விட்டதே காரணம்.

தமிழகத்தில் பல கிராமங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள், மருத்துவ ஊழியர்களோ இன்றிதான் செயல்படுகிறது. பல நவீன மருத்துவமனைகளைக் கொண்ட பெரும் நகரங்கள் கரோனாவின் தாக்கத்தில் தள்ளாடும்போது ஆரம்ப சுகாதார மையங்கள், நோய்த்தொற்று அதிகரித்தால் என்னவாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

coronavirus entry in villages...kamal haasan

முறையான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார மையங்கள், அது இல்லையென்றால் அருகில் உள்ள நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கும் கிராமங்களில் இந்தக் கொரோனா தொற்று வருமுன் தடுக்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். வந்தபின் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயம் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கிராமங்களில் இத்தொற்று பரவினால் நம் நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பொருளாதார அளவில், மருத்துவ அளவில் மட்டுமல்ல அடிப்படைத்தேவைகள் கூட கிட்டாத அளவுக்குச் செல்லக்கூடும்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என பாடப்புத்தகத்தில் மட்டும் சொல்லாமல், செயலில் காண்பித்து, கிராமங்கள் இத்தொற்றுப் பரவலில் சிக்காமல் இருக்க விரைந்து காத்திடுவது நம் கடமை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios