நாட்டின் பிரதமரைப் பின்பற்றினால், நாட்டை விட்டே ஓடும்  கொரோனா என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொண்டே வருவதால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் குணமடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், முன்னாள் தமிழக பாஜக தலைவருவும், தற்போது  தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் கவிதை நடையில் பேசி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- 

 

தனியாக இல்லையென்றால் தவிக்க வைக்கும் கொரோனா

தொட்டுக் கொண்டே இருந்தால் தொற்றிக் கொள்ளும்  கொரோனா

வீட்டிலேயே நாம் இருந்தால், விட்டு ஓடும்  கொரோனா

விலகலைக் கடைப்பிடித்தால், விலகி ஓடும்  கொரோனா

படியை நாம் தாண்டினால் பிடித்துக் கொள்ளும் கொரோனா

கழுவினால் கைகளை, நம்மைத் தழுவாமல் ஓடும்  கொரோனா

தூரமாய் நாம் இருந்தால், துரத்தப்படும் கரோனா

ஒட்டியிருந்தால் நம்மை, ஒட்டிக் கொள்ளும்  கொரோனா

பிரிந்து பிரிந்து நாம் இருந்தால், பதறி ஓடும்  கொரோனா

வெளிப்படையாய் நாம் சென்றால், கலிப்படைந்து தொற்றும்  கொரோனா

ஊரடங்கு இல்லையென்றால், நம் உயிரை அடக்கும்  கொரோனா

தொற்று தடுப்பைப் பின்பற்றினால், தோற்று ஓடும்  கொரோனா

ஊரடங்கைப் பின்பற்றினால், ஊரை விட்டே ஓடும்  கொரோனா

நாட்டின் பிரதமரைப் பின்பற்றினால், நாட்டை விட்டே ஓடும்  கொரோனா

மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றினால், மரித்துப் போகும்  கொரோனா

மோடியைப் பின்பற்றினால் ஓடிப்போகும்  கொரோனா

மோடியைப் பின்பற்றினால், ஓடிப்போகும்  கொரோனா" என்று கூறியுள்ளார்.