இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் காங்கிரஸ் மூத்த  தலைவரான பத்ருதீன் ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏழை, பணக்காரர் என்று பாரபட்சம் பார்க்காமல் மனித குளத்திற்கே பெரும் சவாலாக விளங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்படி இருந்த போதிலும் அதன் விரீயம் கொஞ்சம் கூட கூறையாமல் இருந்து வருகிறது. 

இந்நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது. 6,185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 342 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3301 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அமதாபாத்தை சேர்ந்த பத்ருதீன் ஷேக்கிற்கு (68) கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, பத்ரூதின் ஷேக் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் உயிரிழந்த முதல் அரசியல் தலைவர் பத்ருதீன் ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.