கொரோனா அறிகுறி தெரிபவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க கருவிகள் கொடுக்கப்படும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழகத்தில் அதிக சோதனை நடத்தப்படுவதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் கோவிட்-19 தொற்றின் எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை. சென்னையில் இன்று மட்டும் 399 பேருக்கு கோவிட்-19 பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 1,605 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 2,16,416 மாதிரிகளை தமிழகம் சோதித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 2,16,416 மாதிரிகளை தமிழகம் சோதித்துள்ளது: தமிழகத்தில் மொத்தம் 52 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக குறைந்த இறப்பு விகிதம் - 0.66%. தமிழகத்தில் மேலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. 2,16,416 மாதிரிகள் பரிசோதித்துள்ளோம். நாட்டிலேயே இதுதான் அதிகம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்தின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அறிகுறியே இல்லாமல் தொற்று உறுதியானவர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், ஜிங் மற்றும் சத்து மாத்திரைகள் அடங்கிய சிறப்பு பெட்டகம் வழங்கப்படும். வயதில் மூத்தவர்கள், நீரிழிவு, புற்றுநோய், காசநோய் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குடும்பத்தினர்கள் பொத்திப் பாதுகாக்க வேண்டும்.கொரோனா அறிகுறி தெரிபவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க கருவிகள் கொடுக்கப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.