மும்பை டெல்லியில் வைரஸின் தீவிரம் எப்படி இருக்கும் என்பதை மட்டுமே தான் கணித்துள்ளதாகவும், நாட்டின் பிற பகுதிகள் குறித்து தகவல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் பிப்ரவரி தொடக்கத்தில் மூன்றாவது அலையின் உச்சம் இருக்குமென்று ஆரம்ப கணக்கீடுகள் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். 

மும்பை டெல்லியில் ஐந்து நாட்களுக்கு பிறகு 3வது அலை உச்சத்தை எட்டும் என்றும், பிப்ரவரி மாதத்தில் நாட்டில் தினசரி 8 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்றும் ஐஐடி பேராசிரியர் கணித்துள்ளனர். மேலும் மூன்றாவது அலை மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது அலைகளைப் போல தற்போது 3வது அலை உருவாகியுள்ளது. இரண்டாவது அலையைக் காட்டிலும் ஓமைக்ரான் வைரஸ் உருவெடுத்துள்ள நிலையில் மூன்றாவது அலையில் நோய்த் தொற்று வேகமாக பரவ கூடும் என அஞ்சப்படுகிறது. 7 மாதங்களுக்கு பிறகு ஜனவரி 9 அன்று 1.79 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது. நோய்த்தொற்றை தடுப்பதற்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் நோய்த்தொற்றின் எண்ணிக்கை தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நிபுணர்களின் கூற்று படி 3வது அலையின் உச்சம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என்றும் அப்போது தினமும் 4 முதல் 8 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். டெல்லி மற்றும் மும்பையில் மூன்றாவது அலையின் உச்சம் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும் என்றும் கணித்துள்ளனர். கான்பூரில் உள்ள கணிதம் மற்றும் கணினி அறிவியல் பேராசிரியர் மனிந்தர அகர்வால் 3வது அலையின் பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில் எப்படி இருக்கும் என்பது குறித்து கணித மாதிரிகள் உதவியுடன் கணித்துள்ளார். அதில் மார்ச் 15ஆம் தேதி மூன்றாவது அலை நாட்டில் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஐந்து நாட்களில் மும்பை டெல்லியில் 3வது அலை உச்சத்தை எட்டும் என்றும் அதாவது ஜனவரி 15ஆம் தேதி முதல் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் பேராசிரியர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை மும்பை டெல்லியில் வைரஸின் தீவிரம் எப்படி இருக்கும் என்பதை மட்டுமே தான் கணித்துள்ளதாகவும், நாட்டின் பிற பகுதிகள் குறித்து தகவல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் பிப்ரவரி தொடக்கத்தில் மூன்றாவது அலையின் உச்சம் இருக்குமென்று ஆரம்ப கணக்கீடுகள் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். டெல்லி மற்றும் மும்பையில் எவ்வளவு வேகமாக கிராப் உயர்கிறதோ அவ்வளவு வேகமாக அது குறைய வாய்ப்புள்ளது, இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது, அதன்படி ஒரு மாதத்தில் அது உச்சத்தை அடைந்து மார்ச் நடுப்பகுதியில் 3வது அலை முடிவுக்கு வரும் அல்லது குறையும் என்று கூறியுள்ளார். 

பல நாடுகளை விட இந்தியாவின் தரவு மிகச் சிறந்தது என்றும், பல நாடுகளும் இதில் அடங்கும், நம்மை நாமே புகழ்ந்து கொள்வதைவிட சிறந்த தரமான தரவை வழங்குவதற்காக நமது சுகாதார அமைச்சகத்தை நாம் பாராட்ட வேண்டும் என்றார். தற்போது அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், பல மாநிலங்களில் தகன கூடங்கள் நிரம்பியிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன, இவைகள் அனைத்தும் ஒருவாரம் அல்லது பத்து நாட்களுக்குள் நடந்திருக்கிறது என அவர் கூறியுள்ளார். தற்போது ஊரடங்கு கடுமையாகவும் பட்சத்தில் நோய்த்தொற்றின் வேகத்தை குறைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.