இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் அதிலிருந்து குணமடைந்து விடுகின்றனர் இது இந்தியாவற்கு ஒரு நல்ல அறிகுறி என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது .  அதே நேரத்த்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் எப்போது உச்சக்கட்டத்தை எட்டும் என்பதை கணிக்க முடியாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இந்தியாவில் தற்போது  இந்த வைரஸ் மெல்ல வேகமெடுக்க தொடங்கியுள்ளது .  கடந்த சில நாட்களாக வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன் மடங்காக உயர்ந்துள்ளது ,  இதனால் இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது .  இதுவரையில் இந்த வைரசுக்கு 722 பேர் உயிரிழந்துள்ளனர் .  மொத்தம் 5 ஆயிரத்து 12 பேர் இதுவரை இந்த வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

சுமார் 17 ஆயிரத்து 768 பேருக்கு தொடர்ந்து மருத்துமனைகளில்  சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது ,  ஆனால் இந்தியாவில் இதுவரை  ஒருவர்கூட அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்பது  சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது .  இதுவரை நாடு முழுவதும் 5 லட்சத்து 41 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில்  இது குறித்து தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்க்கவா
.இந்தியாவில் தற்போதுவரை வைரஸ்  கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது ஆனால் இது எப்போது உச்ச நிலையை எட்டும் என கணிக்க முடியாது ,  தற்போது நோய்த்தொற்று விகிதம் 4.5 சதவீதமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

அதே நேரத்தில் இது பற்றி தெரிவித்த  எய்ம்ஸ் மருத்துவமனையின்  இயக்குனர் ரன்தீப் குலேரியா,  இந்தியாவில் இது ஒரு தீவிரமான நோய் தொற்றாக இல்லை, இந்த  நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் குணமடைந்துவிடுகின்றனர் .  ஆதே நேர்த்தில் இந்த நோயில் இருந்து மீண்டு வந்தபின்னரும் அவர்களுக்கு  எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது  மிக முக்கியம் என அவர் கூறியுள்ளார் . அதே நேர்த்தில்  அவர்களுக்கு தாமதமாக நாம் சிகிச்சை வழங்கியிருந்தால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .  என்னுடைய இது குறித்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் செயலாளரும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் சிகே மிஸ்ரா,  இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனைகள் , கட்டாயத் தனிமைப்படுத்துதல் மற்றும் அதற்கான வசதிகள் , நோய் பரவுவதை தடுத்தல் போன்ற நடவடிக்கைகள்,  நாட்டில் வெகுவாக நோய் பரவலை கடந்த 30 நாட்களில் குறைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.