கொரோனா வைரசால் பாதிக்கப்படும் ஆண்களின் விந்தணுக்களில் இந்த வைரஸ் நீண்ட நாட்கள் உயிர் வாழ கூடும் எனவும் ,  அதனால் ஆண்கள் இந்த வைரசால் மிகக்கடுமையாக பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன ,  மும்பையைச் சேர்ந்த மெட்ராக்ஸிக்ஸில் என்ற ஆராய்ச்சி நிறுவனம்  இதை தெரிவித்துள்ளது ,உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,  இந்தியாவில் இதுவரையில்  17000 அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 தாண்டியுள்ளது ,  இந்தியாவில் மிதமான வேகத்தில் பரவி வந்த கொரோனா கடந்த சில நாட்களாக  காட்டுத்தீயாக வேகமெடுத்துவருகிறது .  இந்நிலையில் கொரோனாவால் பெண்களைவிட அதிக அளவில் ஆண்களே பாதிக்கப்படுகின்றனர்.  அதற்கான காரணம் என்ன என்பது குறித்து மும்பையில் வைரசால்  பாதிக்கப்பட்ட 68 நோயாளிகள் மத்தியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது . 

அதில் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆண்களின் விந்தணுக்களில் கொரோனா வைரஸ் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதும் அதுவே  ஆண்கள் கடுமையாக பாதிக்கவும் காரணமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.    இதுகுறித்து அந்நிறுவனம்  சில மருத்துவ ஆராய்ச்சி ஆவணங்களையும் வெளியிட்டுள்ளது ,  அதே நேரத்தில் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய்  மருத்துவமனையின் தொற்று நோய்யியல் மருத்துவர் டாக்டர் ஜெயந்தி சாஸ்திரி - மற்றும் அவரது மகளும், பிராங்க்ஸில் உள்ள மான்டிஃபியோர் மருத்துவ மையத்தின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அதிதி சாஸ்திரி ஆகியோரும்  இந்த வைரஸ் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளனர் , அதாவது கொரோனா வைரஸ் புரதத்தன்மை கொண்டது என்பதால் புரதத் தன்மை கொண்ட விந்தணுக்களில் இது எளிதில் இணைத்துக் கொள்கிறது எனவே அது விந்தணுக்களில் அதிக நாட்கள் வரை உயிர் வாழ்கிறது  என தெரிவித்துள்ளனர். 

அதனால்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் பெண்கள் ஆண்களைவிட அதிக அளவிலும் வேகமாகவும் குணமடைகின்றனர், குறிப்பாக வைரசால்  பாதிக்கப்படும் பெண்கள் 4 நாட்களில் அதிலிருந்து மீண்டுவிடுகின்றனர், அதேபோல் அந்த வைரசை பெண்கள் உடலிலிருந்து விரைவில் அழிகிறது அதற்கு குறைந்தது நான்கு நாட்கள் போதுமானதாக உள்ளது .  ஆனால் ஆண்கள் உடலில் அது  இரண்டு நாடுகள் கூடுதலாக எடுத்துக்கொள்வதை காணமுடிகிறது ,  ஆணுடைய உடலில்  இருந்து  வைரசை அழிப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர் . ஆஞ்சியோடென்சின் மாற்றும் என்சைம் 2, அல்லது ஏ.சி.இ 2 என அழைக்கப்படும் இந்த புரதம் நுரையீரல்,இரைப்பை குடல் மற்றும் இதயம் ஆகியவற்றில் உள்ளது. 

 

ஆனால் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து விந்தணுக்கள் சுவர் செய்யப்படுவதால், வைரஸ் உடலின் மற்ற பகுதிகளை விட நீண்ட காலத்திற்கு (விந்தணுக்களில் ) அங்கேயே இருக்கக்கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இத்தாலி , தென்கொரியா மற்றும் நியூயார்க்  நகரங்களில்  ஆண்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர் என்பதன் மூலமே இதனை தெரிந்துகொள்ளலாம்  அத்துடன் ஆண்கள் அதிக அளவில் புகை பிடிப்பதன் காரணமாகவும் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கரோனரி தமனி நோயால் பாதிக்கப்படுவதால் ஆண்கள் அதிகம் வைரசால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.