உடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு இந்தியாவில்  30 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்றும் ,  பல நல்ல விளைவுகள் நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றும் சுற்றுச்சூழல் செயலாளரும் அதிகாரம் பெற்ற குழு தலைவருமான  சி கே மிஸ்ரா கூறியுள்ளார்,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது  தற்போது அந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமெடுத்து வருகிறது , ஆனால் இந்தியாவில் முன்கூட்டியே சரியான நேரத்தில்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது அது 30 நாட்களை நிறைவு செய்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் 

கொரோனாவை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கும் உருவாக்கப்பட்ட 12 குழுக்களில் அதிகாரமிக்க குழுவின் தலைவராக சிகே மிஸரா, இந்தியா மிக முக்கிய மூன்று விஷயங்களை இலக்காக வைத்து செயலாற்றி அதில் வெற்றி பெற்றுள்ளது என்றார்,  முதலில் ஊரடங்குக்கு ஒத்துழைத்த  இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,  வைரசின் பரிமாற்றத்தை குறைக்கவும் அதன் பரவலைத் தடுக்கும் கடந்த 30 நாட்கள் பயன்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி இந்தியாவின் சோதனையை அதிகரித்துள்ளதுடன் சமூகத்தில் ஒரு நிலையான தன்மையை உருவாக்கப்பட்டுள்ளது,  மூன்றாவதாக வைரஸ் மேலும் பரவினால்  அதை எதிர்கொள்வதற்கு தயார் படுத்தப்பட்டுள்ளது. என அவர் கூறியுள்ளார் , கடந்த 30 நாட்களில் அதிகமாகவோ குறைவாகவோ நிலைத்தன்மையை  உறுதிப்படுத்தப்பட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எனவும்   இதுவரை இந்தியாவில் அரை மில்லியன் கோவிட்-19 பரிசோதனைகள் செய்துள்ளதாகவும் தெரவித்துள்ளார். 

மார்ச்  23 அன்று நாங்கள் நாடு முழுவதும்  14 ஆயிரத்து 915 சோதனைகளை செய்துள்ளோம் ,  ஏப்ரல் 22 ஆம் தேதி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துள்ளோம் ,  தோராயமாக கணக்கிட செய்தால்கூட அது 30 நாட்களில் சுமார் 33 மடங்கு ஆகும் என சுற்றுச்சூழல் செயலாளரும் அதிகாரம் பெற்ற குழு தலைவருமான  சி கே மிஸ்ரா கூறியுள்ளார்.  இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1409 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும்  சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லவ் அகர்வால் தெரிவித்துள்ளார் .  இதுவரை இந்தியாவில் சுமார் 21 ஆயிரத்து 323 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இது  குறித்து சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கூறுகையில் ,  இந்தியாவில் கடந்த 28 நாட்களில்  12 மாவட்டங்களில்  எந்த புதிய வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை,

 

மொத்தம் 23 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் எந்த புதிய வைரஸ் அறிகுறியும் இல்லை ,  இதனால் இந்தியாவில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை கூற முடியும் என கூறியுள்ளார் .  தற்போது இந்த நோயிலிருந்து இந்தியாவில் 1257 பேர் குணமடைந்துள்ளனர்,   கடந்த 24 மணிநேரத்தில்  388 பேர் குணமாடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார் .  இந்தியாவில் மீட்பு விகிதம் சுமார் 19 . 89% ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.