ஆன்லைனில் பதிவு செய்வதின் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .  இதற்கான ஏற்பாட்டை PROCTO நிறுவனமும் தைரோகேர் என்ற நிறுவனமும் இணைந்து செய்துள்ளன.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன .  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இனி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பரிசோதனை செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.  ஆன்லைனில் தங்கள் பெயர் முகவரி பதிவு செய்வதின் மூலம் எளிமையான முறையில் உடனடி பரிசோதனை செய்து கொள்ள முடியும் என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 

ஒரு பரிசோதனைக்கு  4500 ரூபாய் செலுத்தினால் தங்களின் வீடுகளுக்கே வந்து சளி மாதிரிகளை சேகரித்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள PROCTO மற்றும் தெர்மோகேர் நிறுவனங்கள்,  கொரோனா பரிசோதனை செய்யவேண்டிய அவசியமுள்ளவர்கள் இனி  அலையவேண்டுமே என கவலைப்பட தேவையில்லை அவர்களின் வீடுகளுக்கு வந்து சளி மாதிரி எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்து முடிவுகள் வழங்கப்படும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளது என்றும்,  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது,   மருத்துவர்களின் பரிந்துரை சான்று,  பரிசோதிக்கப்பட வேண்டியவரின் பெயர் முகவரி, உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. 

ஒருவருக்கு பரிசோதனை கட்டணமாக 4500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த பரிசோதனைக்கு இந்திய அரசாங்கமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கிகாரம்  வழங்கி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக இந்தத் திட்டம் மும்பை நகர மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது  எனவும்,  விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.   விண்ணப்பிக்கும் போது மருத்துவரின் மருத்துவம் கையெழுத்திட்ட சோதனை அறிக்கை,  மற்றும் பரிந்துரை படிவம் புகைப்படம் உள்ளிட்ட அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.