விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தன் தந்தையில் இரண்டாவது அவதாரமான அரசியல்வாதியகி விட, இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் தனந்து தந்தையில் முதல் அவதாரமான நடிப்பை தொடர்ந்து வருகிறார். சில படங்களில் நடித்துள்ள அவர், பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க, தயாராகி வருகிறார். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இதற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போதுதான் கொரோனா காரணமாக, லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் அங்குச் சிக்கிக்கொண்டார். அங்குள்ள சுமோ ஆம்ஸ்டாம் நகரில் இப்போது இருக்கிறார் சண்முகபாண்டியன்.

கடந்த பிப்ரவரி மாதம் நெதர்லாந்து சென்ற அவர், ஊரடங்கு பாதிப்பால், சர்வதேச விமானங்கள் ரத்தாகி, அங்கேயே தங்கி விட்டார். அதே நேரம், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து, 'சிக்ஸ்பேக்'கும் வைத்துள்ளார். ஆனாலும், மகனை பார்க்க முடியாமல், விஜயகாந்த் ரொம்பவே மன வருத்தத்தில் இருக்கிறார். அவ்வப்போது, 'வீடியோ கால்' மூலம் பேசி, ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள். ஆக கொரோனா விஜயகாந்த் வீட்டிலும் மன வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது.