தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், எம்.எல்.ஏ.கள்,எம்.பி.களை தொடர்ந்து, அமைச்சர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.கரூர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வசந்தக்குமார் எம்பிக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனை வென்டிலட்டரில் ஆக்ஸிசன் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.