தமிழகம் கொரோனா தொற்றுப் பரவலில் மூன்றாம் கட்டத்தை எட்டிவிட்டது, இருப்பினும் இதுவரை இந்த பரவல் நிலையை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வருகிறது என திமுக மருத்துவர் அணியின் துணைத் தலைவர் டாக்டர் சரவணன், குற்றஞ்சாட்டியுள்ளார். 

தி.மு.க., மருத்துவர் அணியின் துணைத் தலைவர் டாக்டர் சரவணன், கொரோனா  தடுப்பில் மாநில அரசின் நிர்வாக குளறுபடி மற்றும் மரணங்களை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து மாவட்ட பத்திரிகையாளர்களுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். தொற்றுநோய் துவங்கியதிலிருந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையை முதலமைச்சரிடம் எழுப்பி வருகிறார், என்று தெரிவித்தார். இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஆக்கப்பூர்வமான பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறினார்.  தமிழகம் கொரோனா தொற்றுப் பரவலில் மூன்றாம் கட்டத்தை எட்டிவிட்டது, இருப்பினும் இதுவரை இந்த பரவல் நிலையை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வருகிறது, என்றார். ஊரடங்கு காலத்தில் மக்களை வீட்டில் முடக்கி வைத்திருந்தபோதே, சோதனைகளை அதிகரித்திருக்க வேண்டும், ஆனால் அரசு செய்யவில்லை, என்று குற்றம்சாட்டினார். 

கொரோனா பாதிப்புகளை கண்டறிய பி.சி.ஆர். பரிசாேதனைகளை மட்டுமின்றி ராபிட் சோதனைகளையும் சரியாக கையாள வேண்டும், என்று தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனைப்படி, ஊடரங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கியிருந்தால், மக்கள்  வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருந்திருப்பார்கள், என்று தெரிவித்தார். அரசின் உதவிகள் போதியளவில் இல்லை என்பதால்தான், தி.மு.க., ஒன்றிணைவோம் வா, என்ற திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ததாக கூறினார். மாவட்ட வாரியாக செய்யப்பட்ட  கொரோனா  சோதனைகளின் எண்ணிக்கை குறித்து தனியான பட்டியலை எதிர்க்கட்சியினர் வெளியிடக் கோரியபோதும், இன்று வரை அரசு அவற்றை வெளியிடப்படவில்லை. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்தவர் செய்த தற்கொலைகள் குறித்த பட்டியலும் அறிவிக்கப்படவில்லை. “ ஜூலை 27 அன்று  தமிழகத்தில் 6993 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. 

இதன் மூலம், மாநில கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், சென்னையில் நேற்று மட்டும் 1494 புதிய பாதிப்புகளுடன், நகரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 95,857 ஆக உயர்ந்துள்ளது” என்று அவர் கூறினார். மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் தினசரி அடிப்படையில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளின் உண்மையான எண்ணிக்கையை பொதுமக்களுக்கு அறிவிப்பதில் அரசாங்கம்  வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவில்லை, என்று குற்றம்சாட்டினார். சமீபத்தில் வெளியான  444  இறப்புகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும்  ஆயிரணக்கான உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றமச்சாட்டினார். இந்தக் கூட்டத்தை முடிக்கும்போது, இந்த நோய்ப் பரவல் நேரத்திலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் கடின உழைப்பிற்கு, டாக்டர் சரவணன் தனது நன்றி தெரிவித்தார்.