பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பல அரசியல்வாதிகளும், பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இதுவரை திமுக எம்.எல்.ஏ., அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்பி., வசந்தகுமார் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாஜ.க மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இல.கணேசன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

பல அரசியல்வாதிகளும், எம்.எல்.ஏக்களும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றனர். புதிதாக பலருக்கு கொரோனா தொற்று பாதிப்படைய வைத்து வருகிறது.