வாடகை வீட்டின் உரிமையாளர் வீட்டில் குடியிருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்று தெரியந்ததும் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் சட்டெனபள்ளி பகுதியில் 28 வயதான வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தகவலறிந்து வந்த வீட்டின் உரிமையாளர், கொரோனா தொற்று பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார்
.தொற்று பாதித்த நபர் செல்பி வீடியோ மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார் தொற்று பாதித்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, உரிமையாளரை எச்சரித்துள்ளனர்.கொரோனா தொற்று என்றாலே மக்கள் மத்தியில் மரண பீதி கிளம்பியிருக்கிறது. என்னதான் அரசாங்கம் விழிப்புணர் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் அந்த அச்சத்தில் இருந்து விலகுவதாக தெரியவில்லை.