கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு சொந்தமான தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த  11 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது அந்த பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களை உடனே சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு மருத்துவமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது,  அதிலும் குறிப்பாக தமிழகத்தில் வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று  தமிழ்நாட்டில் மேலும்  5 ஆயிரத்து  609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,63,222 ஆக அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 65 ஆயிரம் என்கிற அளவுக்கு அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பரிசோதனை எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 

இன்று 58,211 பரிசோதனைகள்  செய்யப்பட்டதில் 5 ஆயிரத்து 650 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று 1021 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள. இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 985 ஆக உயர்ந்துள்ளது. ஒரு புறம் பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது இதுவரை, 2 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து இருப்பது ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக தமிழகத்தில் 109 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மாவட்டங்களில் வைரஸ்  தோற்று வேகமெடுத்து வருகிறது. 

அந்த வகையில் கிருஷ்ணகிரியில்  இதுவரை 1,170 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 617 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து ள்ளனர். 539 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 14 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் இன்று ஒரு நாளில் சுமார் 67 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம்  காவேரிப்பட்டினம் அருகிலுள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் கே.வி.,சீனிவாசனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் பணிபுரியும் 11 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 11 சுகாதாரத்துறையினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த தொழிற்சாலையில் கிருமி நாசினி தெளித்து,  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் தயவு செய்து இந்த செய்தியை வெளியிட வேண்டாம் என கே.வி.,சீனிவாசன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது