Asianet News TamilAsianet News Tamil

கொரோனா: அம்மா கிச்சன் மூலம் 3 வேளையும் அறுசுவை உணவு..! அமர்க்களப்படுத்தும் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார்.!

அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் "அம்மா கிச்சன்"  என்ற பெயரில் உணவுக்கூடத்தை  தொடங்கி அதில் இருந்து தினம் தோறும் மூன்று வேளையும் அறுசுவையான உணவுகளை தயார் செய்து தானே நேரில் இருந்து ஆய்வு செய்வதோடு அவரே சமையலும் செய்து வருகிறார்.கொரோனா நோயாளிகளுக்கு அமைச்சரே சத்தான உணவுகளை தயார் செய்து வழங்குவது தமிழகத்தில் மதுரையில் மட்டுமே.! 

Corona Delicious food all 3 times through Moms Kitchen ..! Minister of State for Home Affairs RP Udayakumar!
Author
Madurai, First Published Jul 11, 2020, 7:22 PM IST

சென்னையில் மட்டுமே அதிக அளவில் அப்பிக்கொண்டிருந்த கொரோனா மதுரைக்கும் படையெடுத்து அதிக அளவில் அப்பிக்கொண்டது. இதனால் கொரோனா தொற்று உள்ள நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனையிலும், 4 தனிமைப்படுத்துதல் மையத்திலும் குவிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சத்தான புரதசத்துள்ள உணவுகள் வழங்குவதில் கேட்டரிங் சென்டர்கள் தயங்கிவருவதாகவும், சரியான நேரத்திற்கு நோயாளிகளுக்கு உணவுகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் நோயாளிகள் முதல் எதிர்க்கட்சிகள் வரை குற்றம் சாட்டிவந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் "அம்மா கிச்சன்"  என்ற பெயரில் உணவுக்கூடத்தை  தொடங்கி அதில் இருந்து தினம் தோறும் மூன்று வேளையும் அறுசுவையான உணவுகளை தயார் செய்து தானே நேரில் இருந்து ஆய்வு செய்வதோடு அவரே சமையலும் செய்து வருகிறார்.கொரோனா நோயாளிகளுக்கு அமைச்சரே சத்தான உணவுகளை தயார் செய்து வழங்குவது தமிழகத்தில் மதுரையில் மட்டுமே.! 

Corona Delicious food all 3 times through Moms Kitchen ..! Minister of State for Home Affairs RP Udayakumar!

இதற்காகவே அதிகாலையில் எழுந்து சமையல் நடைபெறும் இடத்திற்கு ஆஜராகி விடுகிறார் அமைச்சர் உதயக்குமார். அங்கு சமையல் செய்பவர்கள் தலைக்கவசம், முககவசம், கையுறை அணிந்திருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்வதோடு அங்கு தயாராகும் உணவுகளை சாப்பிட்டும் பார்க்கிறார். காலை உணவு நோயாளிகளுக்கு தயாராகும் அந்த அறுசுவை உணவை தானும் சாப்பிட்டு வருகிறார். அதில் சுவைகள் குறைந்திருந்தால் சமையலர்களை அழைத்து சுவையை கூட்ட சொல்லுகிறார். மிளகு பொங்கல், மிளகு தோசை, இட்லி, உளுந்தவடை, அவித்தமுட்டை, மிளகு பால், கேசரி ஆகிய அறுசுவை உணவுகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்காக "அம்மா கிச்சன்" ஈடுபட்டுள்ளது. இதற்கான பணிகளை அம்மா சேரிடபில் டிரஸ்ட் சார்பில் நோயாளிகளுக்கும் மருத்துவபணியாளர்கள், காவல் பணியில் இருப்பவர்கள் என அனைவருக்கும் காலையில் வேன் மூலம் உணவுகள் எடுத்துச்சென்று நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

Corona Delicious food all 3 times through Moms Kitchen ..! Minister of State for Home Affairs RP Udayakumar!

அம்மா கிச்சன் அவசியம் குறித்து அமைச்சர் உதயக்குமார் பேசும் போது..

"முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை சார்பிலும், அம்மா சேரிடபில் ட்ரஸ்ட் சார்பிலும் கடந்த 4ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கொரோனா நோய் சிகிச்சை  பெறுபவர்களுக்கும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் புரதச்சத்து நிறைந்த சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி  உணவு வழங்கப்பட்டு வருகிறது இதில் காலை 11 மணிக்கு சூப் மற்றும் பாசிப்பருப்பு ,மாலை 4 மணிக்கு இஞ்சி டீ ,சுண்டல் வழங்கப்படுகிறது.காலையில் வழங்கப்படும் உணவில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம், இட்லி, வடை, முட்டை ,மிளகுப் பால், இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகிறது.மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மோர்,சப்பாத்தி,பருப்புடால், இரண்டு வகை காய்கறிகள், முட்டை, அப்பளம்,ஊறுகாய் ஆகிய வழங்கப்படுகிறது.

Corona Delicious food all 3 times through Moms Kitchen ..! Minister of State for Home Affairs RP Udayakumar!
இரவு உணவில் இட்லி,தோசை, கிச்சடி, சப்பாத்தி,இரண்டு வகை சட்னி, சாம்பார்,குருமா மற்றும் மிளகு பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.இன்றைக்கு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பல்வேறு போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறார்.குறிப்பாக மதுரையில் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.இன்றைக்கு எதிர்க்கட்சிகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். முதலமைச்சரின் அறிவுரைப்படி மக்களுக்கு  தைரியம்யூட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் சுகாதாரச் செயலாளர்  உள்ளிட்டோர்  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.  இதன் மூலம்  மதுரை  மக்கள் அச்சமில்லாமல் அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.மேலும்,  காய்ச்சல் கண்டறியும் குழுக்கள்   வீடு வீடாக கண்காணித்து வருகின்றனர் விரைவில் மதுரை  கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் உருவாகும் என்று கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios