"போற போக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு" என்று நடிகர் வடிவேலு பாணியில் அமைச்சர் செல்லூர் ராஜு காமெடியாக கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் களத்தில் இறங்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும், நிவாரணப் பணிகளிலும் களமிறங்கியுள்ளனர். அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் உள்ள திமுக அதிமுக எம்எல்ஏக்கள் சுமார்20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை கொரோனா நெருங்காது என்று பேசிய சில நாட்களிலேயே கொரோனா பாதிப்புக்குள்ளானார் அமைச்சர் செல்லூர் ராஜீ.இவரைத் தொடர்ந்து இவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் குணமடைந்தவுடன் கணவன் மனைவி இருவரும் போட்டோ போஸ்டர் மதுரை முழுவதும் மின்னியது.

மதுரை திரும்பிய அமைச்சர் செல்லூர் ராஜுக்கு தொண்டர்கள்... மதுரை மீனாட்சி தாயின் மகனே.! மதுரை மீனாட்சி ஆசி பெற்ற மகனே.! என போஸ்டர் மதுரை முழுவதும் கலக்கி எடுத்திருந்தார்கள் இவரது ஆதரவாளர்கள்.


இந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, சென்னையில் இருந்து மதுரை வந்தார் அவருக்கு மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாநகர மாவட்ட அலுவலகத்தில் வைத்து தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கோரிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, போற போக்கில கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு” என்று வடிவேலு பாணியில் நகைச்சுவையாக மீண்டும் கொரோனாவை சீண்டிவிட்டு போனார்.