கொரோனா தாக்கிய தன்னை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சிகிச்சை அளிக்கவில்லை. தன்னைப்போன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் போவதால்தான் சென்னையில் அதிக கொரோனா தொற்று உருவாவதாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த்அ 42 வயது பெண்மணி ரஜினி ப்ரியா குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள  மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரி ராகவன் என்பவர், ‘’61 வயதான நான் அம்பத்தூர் மண்டலத்தில் வசித்து வருகிறேன். நேற்று முதல் ரஜினி பிரியா என்ற பெண் பேசுவதை  இண்டெர்நெட்டில் பார்த்தேன். அதில் அந்த பெண் மாநகராட்சி அதிகாரிகள் மருந்து கொடுக்கவில்லை என்றும், உணவு கூட இல்லாமல் தவிப்பதாக பேசியிருந்தார். நானும் அதை முதலில் பார்த்தவுடன் பதறினேன். நானும் கடந்த மாதம் கொரோனாவில் இருந்து சிகிச்சை முடித்து திரும்பியவன்தான். அதனால் எனக்கு தெரிந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தேன். 

இந்த குழப்பத்திற்கு காரணம் ரஜினி பிரியா தான் என்று தெரியவந்தது. ரஜினி பிரியா தனக்கு சிம்டெம்ஸ் இருப்பதை தெரிந்து அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இங்கு தான் பிரச்னையே ஆரம்பித்துள்ளது. ரஜினி பிரியா தன்னுடைய முகவரியில் திருவள்ளூர் மாவட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் என்று முகவரியில் கொடுத்துவிட்டு, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது எந்த வகையில் நியாயம். திருவள்ளூர் மாவட்டம் என்று முகவரியில் குறிப்பிட்டிருந்ததால் மாநகராட்சி கொரோனோ பாதித்தவர் லிஸ்ட்டில் ரஜினி பிரியா பெயர் வரவில்லை. இப்போது நான் கேட்கிறேன். 

அப்பல்லோ மருத்துவமனையில் சென்று டெஸ்ட் எடுக்கத் தெரிந்த ரஜினி பிரியாவிற்கு அந்த மருத்துவமனை டாக்டர்களிடமே மருந்து வாங்கிக்க தெரியவில்லையா?. தன்னுடைய முகவரி திருவள்ளூர் மாவட்டம் என்றுகூட தெரியாமல் சென்னை மாநகராட்சியை குறை சொல்வது என்ன நியாயம். இவ்வளவு குழப்பத்திற்கு காரணம் ரஜினி பிரியாவே தான். 

இவ்வளவு நடந்தும் தினந்தோறும் வீட்டுக்கு வந்து கேட்கும் மாநகராட்சி ஊழியர்களிடம் தனக்கு கொரோனா இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக அவருடைய கணவரையும், மாமியாரையும் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது ரஜினி பிரியாவை அம்பத்தூரில் உள்ள ஐடிஐ சென்டருக்கு அழைத்து சென்று சிகிச்சை  அளித்து வருகின்றனர். எனக்கு தெரிந்தவரை மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை என்பது நான்றாக தான் உள்ளது.  இதுவரை சென்னையில் கொரோனா பாதித்த 51 ஆயிரம் பேரில் 31 ஆயிரம் பேர் சரியாகி வீடு திரும்பியுள்ளனர். அதில் நானும் ஒருவன். 

பிரச்னையை முழுமையாக ஆராயாமல் இப்படி வீடியோபோடுவது மாநகராட்சியை மட்டுமல்ல, உயிரை பணயம் வைத்து பணி புரியும் மாநகராட்சி ஊழியர்களை கேவலப்படுத்தும் செயலாகும். இப்பெல்லாம் இது fashion போச்சு. குறைசொல்லி ஒரு வீடியோ போட்டு அதுல விளம்பரம் தேடுகிறார்கள்’’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.