கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் சிகிச்சை பெற்று வந்த ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. உயிரிழந்த சம்பவம் அக்கட்சியின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பல்லி துர்காபிரசாத் ராவ் (65). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கடந்த மாதம் 14ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பல்லி துர்காபிரசாத் ராவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், கடைசியாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ்  என்று வந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.