- Home
- Politics
- அடியாட்களோடு திமுக செந்தில் வேல் ரௌடியிசம்..! 10 நிமிடம் கரண்ட் கட்.. குண்டர்களோடு பாஜகவினரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ..!
அடியாட்களோடு திமுக செந்தில் வேல் ரௌடியிசம்..! 10 நிமிடம் கரண்ட் கட்.. குண்டர்களோடு பாஜகவினரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ..!
என் மீதும், என்னைக் காக்கச் சென்ற 20-க்கும் மேற்பட்ட இளைஞரணி சொந்தங்கள் மீதும் தி.மு.க கூலிப்படை நடத்திய கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சக்கட்டம் இது.

அவையில் கெட்டவார்த்தை பேசிய செந்தில்வேல்
தனியார் தொலைக்காட்சி சார்பாக நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய திமுக பேச்சாளர் செந்தில்வேல் அரங்கத்திற்கு வெளியே குண்டர்களை திரட்டி பார்வையாளர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி இதுகுறித்து தனது எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மக்கள் சபை விவாத நிகழ்ச்சியின் படப்பிடிப்பு எழும்பூரிலுள்ள தந்தி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
விவாதத்தில் செந்தில்வேல் பேசத் தொடங்கும்போது பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேலி, கிண்டல் செய்தனர். அதில் யாரோ ஒருவர் ஒருமையில் செந்தில்வேலை விளிக்கவே, கோபப்பட்டவர் அந்த அவையிலேயே கெட்ட வார்த்தையில் பேசி, கத்தினார். 100 பேரை நான் இறக்கிக் காட்டட்டுமா? என ஆவேசமானவர், பேச முடியாதென அவையைவிட்டு வெளியேறினார். நெறியாளர், பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட எல்லோரும் சமாதனம் செய்ய முற்பட்டும், வெளியேறினார்.
50 குண்டர்களை திரட்டி மிரட்டல்
செந்தில்வேல் வெளியேறியப் பிறகும், நிகழ்ச்சி தொடர்ந்தது. திமுகவின் தங்க.தமிழ்ச்செல்வன் பேசும்போதும் பாஜகவினர் கேலி, கிண்டல் செய்தனர். அவர் எதிர்வினையாற்றியதும் அடங்கினர். அதன்பிறகு, 1 மணிநேரம் வரை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்தப் பிறகு, வெளியில் செல்ல வேண்டாம் என எல்லோரும் அறிவுறுத்தப்பட்டார்கள். என்னவென்றால், 50க்கும் மேற்பட்டரோடு செந்தில்வேல் வெளியில் நிற்கிறார். வன்முறை ஏற்படும் சூழல் இருக்கிறதெனக் கூறினார்கள்.
செந்தில்வேலைப் பேசவிடாது இடையூறு செய்த பாஜகவினரின் செயல்பாடு அநாகரீகமானது. கண்டிக்கத்தக்கதுதான். அதற்கு திமுகவைச் சேர்ந்த குண்டர்களை அழைத்து வந்து வன்முறைக்கு வித்திடுவது எந்தவிதத்தில் சரியானது?
திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் விவாதம் முடிந்ததும், பார்வையாளர்களிடம் இவ்வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்திவிட்டு, இயல்பானார்.
மிரட்டுவதும், தாக்குவதும்தான் சனநாயகமா?
பத்திரிக்கையாளர் எனும் அடைமொழியோடு விவாதங்களில் பங்கேற்கும் செந்தில்வேல் திமுகவைச் சேர்ந்தவர்களைத் திரட்டி வைத்து வன்முறைக்குத் தூபம் போடுவதெல்லாம் என்ன மாதிரி அரசியல்? செந்தில்வேலுக்கு இந்தத் துணிவைக் கொடுத்தது யார்? கூச்சலிட்டு அநாகரீகமாக நடந்து கொண்டோரை சனநாயகரீதியில் கண்டிக்காது, ஆட்களைத் திரட்டி மிரட்டுவதும், தாக்குவதும்தான் சனநாயகமா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மக்கள் சபை விவாத நிகழ்ச்சியின் படப்பிடிப்பு எழும்பூரிலுள்ள தந்தி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
விவாதத்தில் செந்தில்வேல் பேசத் தொடங்கும்போது பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேலி, கிண்டல் செய்தனர். அதில் யாரோ ஒருவர்…— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) January 9, 2026
வன்முறைகளமாக மாற்றிய செந்தில் வேல்
இந்நிலையில், நிகழ்ச்சி நடந்த அரங்கத்திற்கு வெளியே குண்டர்களை திரட்டி செந்தில்வேல் மிரட்டிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அதில், ‘‘இப்போ நாங்கள் காத்திருக்கிறோம். யாருக்காக காத்திருக்கிறோம் என்றால் உள்ளே சப்தமிட்டு, ஒரு 10 பேர் சேர்ந்த உடனே வீரத்தை காட்டினார்களே, அந்த வீரத்தை அவர்கள் வெளியில் காட்ட வேண்டும். எங்கள் பலத்தை காட்டுவோம்.
இனி ஒரு திராவிட இயக்கத்தினர் பேசுகின்றபோது அரங்கிற்குள் ஒரு திமுககாரன் இல்லாவிட்டாலும், அவன் பேசுவதை அமைதியாகக் கேட்க வேண்டும், அவனுக்கு இடையூறு செய்யக்கூடாது என்கிற பாடத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அவர்கள் வரட்டும்’’ என தெரிவித்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அடுத்து அரங்கைவிட்டு வெளியே வந்த பாஜகவினருடன் செந்தில்வேல் அழைத்து வந்த குண்டர்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த இடமே வன்முறைகளமாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியா தொலைக்காட்சி விவாதத்தில் பேசவக்கற்ற அண்டா செந்தில் வேல் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் ரவுடிகளுடன் காத்திருப்பதும் அவர்கள் அனைவரும் சேகர்பாபுவின் அடியார்கள் என்று அவனே சொல்லும் பதிவு.
நிகழ்ச்சி முடித்து வெளியில் வந்த பாஜக நிர்வாகிகளை தாக்க திட்டமிட்டு செயல்பட்டனர். pic.twitter.com/9KZpwiAjx9— Rajbjp (@rajsd_bjp) January 9, 2026
போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல்
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லாத தி.மு.க-வினர், தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். என் மீதும், என்னைக் காக்கச் சென்ற 20-க்கும் மேற்பட்ட இளைஞரணி சொந்தங்கள் மீதும் தி.மு.க கூலிப்படை நடத்திய கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சக்கட்டம் இது. எழும்பூர் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் விவாதம் முடிந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்கதமிழ்செல்வன் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லாத தி.மு.க-வினர், தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். என் மீதும், என்னைக் காக்கச் சென்ற 20-க்கும் மேற்பட்ட இளைஞரணி சொந்தங்கள் மீதும் தி.மு.க கூலிப்படை நடத்திய கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
சட்டம்… pic.twitter.com/2oWxsvsDVP— Dr.SG Suryah (@SuryahSG) January 9, 2026
10 நிமிடங்கள் துண்டிக்கப்பட்ட மின்சாரம்
'நாங்கள் 10 நிமிடங்கள் மின் இணைப்பைத் துண்டிக்கிறோம், நீங்கள் கிளம்புங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று குண்டர்கள் போலீசாரிடமே கூறிவிட்டுத் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியளிக்கிறது. சொன்னபடியே 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, திட்டமிட்டு இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. காவல்துறையின் முழு உடந்தையுடன் நடந்த இந்தத் தாக்குதல், கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். குண்டர்களை ஏவிவிட்டு அரசியல் செய்யும் தி.மு.கவின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. பாதிக்கப்பட்ட எங்கள் இளைஞரணி சொந்தங்களின் சிந்திய ரத்தத்திற்கு இந்த விடியா அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
