தாய்க்கு இருந்த கொரோனா பச்சிளம் குழந்தையும் கொன்ற சம்பவம் பெங்களுரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் முக்கிய  பகுதியைச் சேர்ந்த நிறைமாத பெண் கர்ப்பிணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா பரிசோதனையும் செய்தார்கள். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில்...


குழந்தை பிறந்த 4மணிநேரத்திலேயே இறந்து போனது. இந்த தகவல் தெரிந்ததும் உறவினர்கள் யாரும் வரவில்லை. தாயும் குழந்தையும் தனித்தனியாக பிரிக்கப்பட்டார்கள். இதனால் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய யாரிடம் ஒப்படைப்பது என்று டாக்டர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுபற்றி பெங்களூர் சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் நடத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அந்த அமைப்பில் இருந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற சில முஸ்லிம் வாலிபர்கள் கொரோனாவுக்கு இறந்த குழந்தையின் உடலை பெற்று கொண்டனர். பின்னர் அந்த குழந்தையை ஆம்புலன்சில் எடுத்து சென்று சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்திற்கு குழந்தையின் உடலை எடுத்து சென்ற முஸ்லிம் வாலிபர்கள் அங்கு குழிதோண்டி குழிக்குள் பூக்களை தூவி பால் ஊற்றி இந்து முறைப்படி அந்த குழந்தையின் உடலை முஸ்லிம் வாலிபர்கள் அடக்கம் செய்தனர்.