Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் கொரொனா 3 வது அலை வருவது உறுதி.? நோயெதிர்ப்பு சக்கி உருவானதா, இல்லையா? சுகாதாரத்துறை ஆய்வு.

தமிழகத்தில் கொரொனா 3 ஆம் அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மூன்றாவது கட்ட செரோ சர்வே  துவங்கியுள்ளது. 

Corona 3rd wave is sure to come in Tamil Nadu.? Did the immune system develop, or not? Health study.
Author
Chennai, First Published Jun 29, 2021, 12:25 PM IST

தமிழகத்தில் கொரொனா 3 ஆம் அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மூன்றாவது கட்ட செரோ சர்வே  துவங்கியுள்ளது. கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நபர்களுக்கு உருவாகிறது என்பது தொடர்பான தமிழக சுகாதாரத் துறையின் மூன்றாவது கட்ட ஆய்வு துவங்கியது. 46 சுகாதார மாவட்டங்களில் 888 நோய் பாதிப்பு இடங்கள் கண்டறியபட்டு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்ய சுகாதார துறை திட்டம். கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு ( SERO SURVEY ) தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில்  அண்மையில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.

Corona 3rd wave is sure to come in Tamil Nadu.? Did the immune system develop, or not? Health study.

அதில்  சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த இடங்களான 765 இடங்களில் 22,905 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டதில்  கிரமம் மற்றும் நகர் புறங்களில் உள்ள தெருக்களில் குறைந்தது 30 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அன்மையில் வெளியிடபட்ட இந்த  முடிவுகள்  அதில், 22904 நபர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டதில், 5,316  பேர் அதாவது  23 சதவீதத்தினருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது எனவும், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49% பேருக்கும், குறைந்தபட்சம் நாகை மாவட்டத்தில் 9% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது. முன்னதாக முதல் ஆய்வு கடந்தாண்டு ஆகஸ்ட்  மாதத்தில் நடத்தப்பட்டது. அப்பொழுது, 22,690 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தமிழகத்தில்  31% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 49% ஆகவும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 13% ஆகவும் இருந்தது. 

Corona 3rd wave is sure to come in Tamil Nadu.? Did the immune system develop, or not? Health study.
தற்போது கொரோனோ இரண்டாவது அலை பரவல் , கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம் ஆகியவை காரணமாக ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் குறித்து இரண்டாவது கட்ட SERO சர்வேயில் கடந்தாண்டு நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் சர்வே எடுக்கப்பட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி 31% லிருந்து 23% ஆக குறைந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. தற்போது மார்ச் மாதத்திற்குப் பிறகு தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மார்ச் மாதத்திற்கு  முன்னரே ஆய்வு மேற்கொண்டதுதான் நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.தொடர்ந்து வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் இந்த ஆய்வு நடத்தப்படும் எனவும், அப்பொழுது 18 வயதுக்கு மேல் தடுப்பூசி செலுத்திய அனைவரையும் உட்படுத்துப்படும் என தமிழக சுகாதார துறை தெரிவித்திருந்தது.

Corona 3rd wave is sure to come in Tamil Nadu.? Did the immune system develop, or not? Health study.

அந்த வகையில் தற்போது தினசரி தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு , உருமாறிய கொரனோ வைரஸ் பாதிப்புகள் ஆகியவை கண்டறியப்பட்ட நிலையில்  தற்போது 3-வது கட்ட SERO சர்வேயில் கொரோனோ தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்ததா.? மற்றும் உருமாறிய வகை வைரஸ் பாதிப்புகள் தாக்கம் குறித்து ஆய்வு நேற்று முதல் சுகாதாரத் துறையின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 46 சுகாதார மாவட்டங்களில் 888 நோய் பாதிப்பு இடங்கள் கண்டறியபட்டு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்ய சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios