Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவை கொரோனா 3வது அலை எப்போதும் தாக்கலாம்... இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை..!

 இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவும் அபாயம் இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

Corona 3rd wave could hit India forever ... Indian Medical Association warns
Author
Tamil Nadu, First Published Jul 13, 2021, 12:27 PM IST

உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவும் அபாயம் இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை பரவல் கடந்த 2 வாரங்களாக குறைந்து வருகிறது. ஆனால் உலக நாடுகளில் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அடுத்து, கொரோனா 3-வது அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.Corona 3rd wave could hit India forever ... Indian Medical Association warns

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா 2வது அலையில் இருந்து கடந்த 2 வாரங்களாக இந்தியா மீண்டு  வருகிறது. ஆனால், வழிப்பாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டிருப்பதால் கொரோனா 3வது அலை தொற்று பரவ வழிவகுக்கும். இதனால் எந்த நேரத்திலும் கொரோனா 3-வது அலை இந்தியாவை தாக்கலாம்.

 Corona 3rd wave could hit India forever ... Indian Medical Association warns

கொரோனா தடுப்பு விதிகளான சமூக விலகல், முகக்கவசம் அணிவது போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்காமல் இருப்பது தொற்றுப் பரவலை அதிக்கப்படுத்தும். பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகால படிப்பினைகள் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது, கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது போன்றவை அவசியம்" எனக் கூறப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios