Asianet News TamilAsianet News Tamil

கூட்டுறவு பணியாளர்களுக்கு நேரும் ஆபத்து...!! முதல்வரிடம் கதறிய ஊழியர்கள் சங்கம்..!!

covid-19 தொற்று காரணமாக ஊழியர்கள் இறக்கும்பட்சத்தில் அவர்களது குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது,

cooperative society employees affect corona -association demand with cm
Author
Chennai, First Published Jun 15, 2020, 7:36 PM IST

covid-19 தொற்று காரணமாக உயிரிழந்த கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமென அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளது அதில், covid-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச்  மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எளிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசின் ஆணைகளின்படி கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் கோவில் 19 வைரஸ் தொற்றுக்கு அஞ்சாமல் வீடுவீடாக  சென்றும், நியாய விலை கடைகளில் நிவாரணத்தொகை ரூபாய் 1000 வழங்கியதுடன், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான டோக்கன்களை வீடு வீடாக சென்று வழங்கியும், அம்மாதங்களுக்கான விலையில்லா அத்தியாவசிய பொருட்களும் மற்றும் பிரதமர் அறிவித்த மக்கள் நலன் காக்கும் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதலாக நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசியையும் முறையாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்ததில் கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்களின் அரும்பணி தாங்கள் அறிந்ததே. 

cooperative society employees affect corona -association demand with cm

கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்களின் பாதுகாப்புக்கு கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம் வழங்க வேண்டுமென்றும், அவர்கள் கூடுதல் பணிக்காக மற்ற அரசுதுறை ஊழியர்களுக்கு வழங்கியது போன்று ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்கங்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாள்தோறும் நியாய விலை கடைகளுக்கு சென்று வரக்கூடிய ஊழியர்களுக்கு பயண செலவு தொகை வழங்கப்பட்டு வருகிறது, அதே போன்று மற்ற அரசு துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுபோல் கூட்டுறவு துறை  ஊழியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாத ஊதியம் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது ஏப்ரல் 2020க்கான ஊதிய தொகையாக நியாய விலை கடை  விற்பனையாளர்களுக்கு 2500, கட்டுனர்களுக்கு 2000 வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் மருத்துவ காப்பீட்டு தொகை மற்ற அரசு ஊழியர்களுக்கு உயர்த்தியது போன்று கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்களுக்கு அதிகரித்து வழங்க வேண்டும். 

cooperative society employees affect corona -association demand with cm

covid-19 தொற்று காரணமாக ஊழியர்கள் இறக்கும்பட்சத்தில் அவர்களது குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது, கடந்த மூன்று மாத காலத்தில் நியாய விலை கடை ஊழியர்கள் தோற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், இவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை உடனடியாக செய்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில் டியூசிஎஸ் நியாயவிலைக் கடையில் பணியாற்றிய ஊழியர்,  சுரேஷ்குமார் வயது (42) covid-19 வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த பத்து தினங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 13-6-2020 அன்று மரணமடைந்துள்ளார் அவரது குடும்பம் தற்போது நிர்க்கதியாய் ஆதரவற்று நிற்கிறது, அவரது குடும்பத்தை காப்பாற்றவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரூபாய் 50 லட்சம் நிவாரணமாக வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என அந்த  மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios