cooker will burst or not in assembly

சட்ட சபையில் வெடிக்கப் போகும் பிரஷர் குக்கர்...!

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதையடுத்து,முதல் முறையாக சுயேட்சை எம்எல்ஏ- வாக உள்ள தினகரன் வரும் 8 ஆம் தேதி, முதல் முறையாக சட்டசபையில் பேச உள்ளார்.

அப்போது எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்-க்கு எதிராக பிரஷர் குக்கர் வெடிக்கும் அளவிற்கு பல திட்டங்கள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடிக்கு சவால் விடும் தினகரன் 

மார்ச் மாதம் வரைக்கும் தான் உங்கள் ஆட்சி என தொடர்ந்து தினகரன் எடப்பாடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்

ஒழுங்கு நடவடிக்கை 

தினகரன் எந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் இடிச்சபுளி பழனிசாமி என்றும், ஜெயக்குமாரை பற்றி பேசும் போது மூட்டை பூச்சி என்றும் கிண்டலாக பேசி வருகிறார்.
இதே போன்று,இதே வேகத்தில் சட்டசபையிலும் பேசினார் என்றால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது

சட்டசபையில் மெகா ப்ளான்

சட்டசபையில் பேசும் போது தினகரன்,எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க சூப்பர் ப்ளான் ரெடியாக வைத்துள்ளாராம்.அதாவது அதிகார பலம் எடப்பாடி பக்கம் இருந்தாலும்,மக்கள் பலமும்,பண பலமும் தன்னிடம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், மற்ற எம்எல்ஏக்கள் கூட தினகரன் அணி பக்கம் சாய்ந்து விட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது

ஆட்சிய கவிழ்க்க மாஸ்டர் ப்ளான்

ஏற்கனவே எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினரிடையே ஈகோ இருந்தது. ஆனால் ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து,eps ops இடையேயான ஈகோ சற்று குறைந்துவிட்டது.

இந்நிலையில் பன்னீர் செல்வம் அதரவு எம்எல்ஏக்கள் மற்றும் சில அதிருப்தி எம்எல்ஏக்களை மட்டும் கவர் செய்து, தன் பக்கம் இழுக்க ப்ளான் ரெடியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டும் இல்லாமல், இதற்கான பேச்சு வார்த்தை கூட நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும்,தினகரன் தரப்பிலிருந்து நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வலியுறுத்தப்படும் என தெரிகிறது