Asianet News TamilAsianet News Tamil

ஜாதியை மையப்படுத்தி தகாத வார்த்தையால் திட்டிய அமைச்சர் பென்சமின்... 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு..!

மதுரவாயல் வாக்குச்சாவடி அருகே அமைச்சர் பென்சமின் ஜாதியை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியதையடுத்து அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

controversy speech...Case registered against Minister Benjamin
Author
Chennai, First Published Apr 7, 2021, 5:32 PM IST

மதுரவாயல் வாக்குச்சாவடி அருகே அமைச்சர் பென்சமின் ஜாதியை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியதையடுத்து அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த 5 ஆண்டுகள் சென்னை துணை மேயராகவும் 5 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்த பென்சமின் மீண்டும் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட நொளம்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவருக்கு எதிராக வேறு கட்சிகளை சேர்ந்த சிலர் கட்சி கொடியை காண்பித்து வாழ்க என்று கூறினர். இதனால் டென்ஷன் ஆன அமைச்சர் பென்சமின், வாக்களிக்க வந்த மக்களை பொது இடத்தில் வைத்து அசிங்கமான வார்த்தையில் பேசுவது மட்டும் இல்லாமல் ‘நான் என்ன பூணூலா போட்டு இருக்கேன்’ என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை மையப்படுத்தியும், திட்டியும் தகாத வார்த்தையால் பேசி உள்ளார்.

controversy speech...Case registered against Minister Benjamin

அவர் தோல்வி பயத்தில் தனது சமுதாயத்தைதவிர வேறு சமுதாயத்தினர் யாரும் வாக்களிக்க கூடாது என்ற என்னத்தில் மதுரவாயல் 92வது வார்டில் வாக்களிக்க வந்த பொது மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் ஜாதி கலவரத்தை தூன்டும் விதமாக தகாத வார்த்தையால் ஆக்ரோஷமாக மிரட்டி வாக்காளர்களை அச்சுறுத்தும் விதமாக பேசியதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர். உடனே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வேட்பாளர் பென்சமினை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தெரிவித்திருந்தனர். 

controversy speech...Case registered against Minister Benjamin

இதனையடுத்து, மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான பெஞ்சமின் மீது 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அமைச்சர் பெஞ்சமின் கொடுத்த புகாரின் பேரில் திமுகவினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios