கொரோனா தடுப்பு ஆலோசனக்காக அமைக்கப்பட்ட குழுவினருடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதில் ஊரடங்கை நீட்டிப்பது, கட்டுப்பாடுகளை தளர்த்துவதா, அதிகப்படுத்துவதா என்பது பற்றி நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.

ஜூன் 3ம் தேதிக்குள் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்ட படுக்கைகள் வசதி கொண்ட சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- தமிழக மக்களின் உயிர்களை காக்க அத்தனை முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல்வராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். 1,200 நர்சுகளை பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகள் கட்டணங்களை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களுக்கு தனி கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தேன்.

14 மாவட்டங்களில் 22 அமைச்சர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசிக்காக உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் உள்ள டாக்டர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு ஆலோசனக்காக அமைக்கப்பட்ட குழுவினருடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதில் ஊரடங்கை நீட்டிப்பது, கட்டுப்பாடுகளை தளர்த்துவதா, அதிகப்படுத்துவதா என்பது பற்றி நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னையை போன்று பிற மாவட்டங்களில் கட்டளை மையம் அமைக்க ஆலோசித்து வருகிறோம். ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம். விரைவில் கொரோனா உச்சநிலையை எட்டும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

ஆட்சி அமைத்த 2 வாரங்களில் 16 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இயற்கை மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஒரு நாளைக்கு 1.70 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில், செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட கொரோனாவை கட்டுப்படுத்துவது தான் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அப்போது தான் நிஜமாக மகிழ்ச்சி அடைவோம். பொது மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.