இதுவும் போச்சா.. அடுத்தடுத்து எடப்பாடியாருக்கு சாதகமான தீர்ப்பு .. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதனை தொடர்ந்து, இந்த உத்தரவை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், பொதுக்குழுவிற்கு தடை மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மீதான நீதிமன்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். 

Contempt case against Edappadi Palanisamy dismissed

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த பொதுக்குழுவில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ல் நடைபெறும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.

இதையும் படிங்க;- நெருப்புடன் விளையாடாதீங்க.. விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. ஆ.ராசா பேச்சுக்கு எதிராக எகிறும் வானதி.!

Contempt case against Edappadi Palanisamy dismissed

தீர்மானங்களை நிராகரித்தது மற்றும் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்டவை  நீதிமன்ற அவமதிக்கும் செயல் என ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில்,  சண்முகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, பொதுக்குழு தொடர்பாக பழனிசாமி தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.

இதையும் படிங்க;-  25 எம்.பிக்கள் வெல்வோம்.. ஊடகங்களை அமைச்சர் சேகர்பாபு சீண்டிவிடுகிறார்.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Contempt case against Edappadi Palanisamy dismissed

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் சந்திரமோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதனை தொடர்ந்து, இந்த உத்தரவை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், பொதுக்குழுவிற்கு தடை மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மீதான நீதிமன்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சண்முகம் தாக்கல் செய்த 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுன்ன நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க;- அதிமுக அஸ்திவாரத்துக்கே ஆப்பு? இன்று முடிவு எடுக்கப்போகிறது நீதிமன்றம்.. அலறும் இபிஎஸ்..! 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios