Asianet News TamilAsianet News Tamil

இடைத்தேர்தலில் 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி; அன்பில் மகேஸ் நம்பிக்கை

ஈரோடு இடைத்தேர்தலில் தோழமைக் கட்சியான காங்கிரஸ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

congress will win more than 50 thousand votes in erode by election says minister anbil mahesh
Author
First Published Feb 3, 2023, 11:56 AM IST

பேரறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தலைமையில் நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் தொடங்கி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலை வரை நடைபெற்றது. தொடர்ந்து அண்ணா சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் அண்ணாவின் புகழை பறைசாற்றும் விதத்தில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்த பேரணி நடைபெற்றது. பகுதி நேர பேராசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய தினமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இப்படை தோற்பின் எப்படை வெல்லும்? அண்ணாவுக்கு பேரணியாக சென்று மரியாதை செலுத்திய முதல்வர்

30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர பேராசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய  மனுவை என்னிடம் அளித்தனர். அதனை வாங்கிக் கொண்டுதான் தமிழக முதலமைச்சர் வேலூர் பயணம் மேற்கொண்டபோது ரயிலில் இதுகுறித்து பேசினேன். குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

இது தொடர்பாக நல்ல ஒரு முடிவை முதலமைச்சரின் தலைமை அலுவலகம் எடுக்கும். நிதிநிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை படிப்படியாக நிறைவேற்றுகின்ற வண்ணம் எங்களது செயல்பாடுகள் இருக்கும். ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம்.இது உங்களுக்கான ஆட்சி.

முடங்கும் நிலையில் இரட்டை இலை.! சமரச பேச்சு நடத்தும் பாஜக.! இபிஎஸ்யை தொடர்ந்து ஓபிஎஸ்யையும் சந்தித்த அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. மாநகராட்சி 33 வார்டுகளில் ஒரு வார்டு மட்டுமே அதிமுக கவுன்சிலரை கொண்டுள்ளது. அந்த வார்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் அந்த சேலஞ்ச் தேவை. நீயா, நானா? என பார்க்கும் அளவிற்கு நாங்களும் களத்தில் இறங்கியுள்ளோம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செல்லும் இடமெல்லாம் மக்களுடைய வரவேற்பும் சிறப்பாக உள்ளது. குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios