2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவரும் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவுமான வசந்தகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவும் காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான வசந்தகுமார், பிரதமர் மோடி கருணாநிதியை சந்தித்ததற்கும் 2ஜி தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது என தெரிவித்தார்.

ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியினரும் தினகரன் தரப்பினரும் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஆனாலும் மக்கள் திமுகவிற்குத்தான் வாக்களித்துள்ளார்கள். எனவே திமுக கண்டிப்பாக வெற்றி பெறும். திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது எழுதப்படாத சட்டமாகும். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அந்த அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும்.