மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் பா.ஜ.க.வும், சிவ சேனாவும் கூட்டணி போட்டு தேர்தலை சந்தித்தன. எதிர்பார்த்த மாதிரியே தேர்தலில் பெரும்பான்மையா இடங்களை அந்த கூட்டணி கைப்பற்றியது. 

முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால் நீங்க ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என பா.ஜ.க.வுக்கு சிவ சேனா நிபந்தனை போட்டது. இதனால் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உரிமை கோராமல் இருந்து வந்தது.


இந்நிலையில் அம்மாநிலத்தில் கடந்த ஆட்சியின் ஆயுட்காலம் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது. இதனையடுத்து தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சியான பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க வருமாறு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.

 ஆனால், பெரும்பான்மை பலம் இல்லை அதனால எங்களால் ஆட்சி அமைக்க முடியாது என பா.ஜ.க. பின்வாங்கி விட்டது. இதனையடுத்து அதிக இடங்களை வென்ற 2வது பெரிய கட்சியான சிவ சேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். 

அதேசமயம் 24 மணி நேரத்துக்குள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்துடன் வர வேண்டும் என கவர்னர் தெரிவித்தார்.
இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் சிவ சேனா ஆதரவு கேட்டது. தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தர தயாராக இருந்தது. ஆனால் முதலில் விருப்பம் இருப்பதாக தெரிவித்த காங்கிரஸ் பின்பு ஆதரவு குறித்து கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுடம் ஆலோசனை செய்ய வேண்டும் என பின்வாங்கியது. 

இதனால் கவர்னர் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை சிவ சேனாவால் கொடுக்க முடியவில்லை.  இதனையடுத்து ஆட்சி அமைக்க முடியாம என்பதை தெரிவிக்குமாறு தேசியவாத காங்கிரசிடம் கவர்னர் கூறினார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கூடுதல் அவகாசம் கேட்டது இதனையடுத்து மகாராஷ்ராவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்தார். 

இதனையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நேற்று அமல்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிராவின் தற்போதைய சிக்கலான அரசியல் சூழ்நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டுகிறது. மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மியின் பிரீத்தி சர்மா மேனன் டிவிட்டரில், காங்கிரஸ் தலைமை எப்போதும் கட்சியைதான் தேசத்தின் முன் வைக்கிறது.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிராந்திய கூட்டணிக்கு மறுத்தது மற்றும் பா.ஜ.க. வெற்றி பெற உதவியது. தற்போது அவர்கள் மகாராஷ்டிராவை தட்டில் வைத்து பா.ஜ.க.விடம் கொடுக்கிறார்கள். இந்த மோசமான அணுகுமுறை அவர்களை அழித்து விடும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் போய் சேர்ந்துவிடுங்கள். தற்போது காங்கிரஸ் அழிய இதுதான் சரியானநேரம். என பதிவு செய்து இருந்தார்.