திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டு உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது 10 தொகுதிகளில் போட்டியிட உள்ள இடங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக உடன்பாடு செய்யப்பட்டு கையெழுத்தானது. 

அதன்படி, புதுச்சேரி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, சேலம்,  உள்ளிட்ட பத்து தொகுதிகள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே புதுச்சேரி தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 9 தொகுதிகளை நாளை திமுக தலைமை அறிவிக்கும் ‘’ என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அடுத்து இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.