Congress spokesperson Khushboo Athuradi questioned Prime Minister Narendra Modis DMK leader Karunanidhi in his residence.
பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தது குறித்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.
தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
வயது முதிர்ச்சி காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த பிரதமர் மோடி அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.
கோபாலபுரம் வீட்டிற்கு வந்த பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
சுமார் 10 நிமிடங்கள் கருணாநிதியின் இல்லத்தில் பிரதமர் மோடி இருந்தார். இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. திமுக கூட்டணி மாறும் எனவும் அதற்கான பிரதிபலிப்பே இந்த சந்திப்பு எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ விமர்சகர்களின் கேள்விக்கு ரூம் போட்டு யோசிப்பாங்களோ என நக்கலடித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும்போது கூட கருணாநிதியை சந்தித்தார் எனவும் அதற்கு கூட்டணி வலுவாக உள்ளது என யாரும் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
