முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மோடியும், அமிஷ்தாவின் தலையீடு இருந்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டியுள்ளார். 

அதிமுகவில் பாஜக தலையீடு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 51 வது பிறந்தநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் கேக் வேட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய துணை கண்டம் இல்லாமல் போய்விடும். நாட்டு மக்களும் நிம்மதியை இழக்கநேரிடும் என தெரிவித்தார். பாஜகவை ஒழிக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதில் மற்றவர்களைவிட நமக்கு கடமை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மோடியும், அமிஷ்தாவின் தலையீடு இருந்து வருகிறது என தெரிவித்தவர், அதிமுகவில் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் பாஜகவினர் தான் என விமர்சித்தார்.அதிமுகவில் நடைபெறும் ஒற்றை தலைமை விவகாரத்தைப் பற்றி பேசிய அவர் ஒன்றை தலைமையாக இருந்தாலும் சரி இரட்டை தலைமையாக இருந்தாலும் சரி மூன்றாம் தலைமையாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டில் அதிமுக பாஜகவின் கைபாவையாக தான் இருப்பார்கள் என கூறினார்.

அண்ணாமலைக்கு வாயும் நாக்கும் அதிகம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாயும், நாக்கும் அதிகம். பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார். எப்படியாவது எதிர்கட்சியாக வரவேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரவுடிகளையும் பாஜகவில் சேர்த்து உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் முடிந்தபிறகு, பாஜகவை தமிழகத்தில் வளர விடக்கூடாது. தமிழகத்தைவிட்டு துரத்த வேண்டும் இதுதான் நமக்கு முதல் வேலை என தெரிவித்தார். ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மையமாக கொண்டு வரவேண்டும் என்று தான் இந்தியாவில் புதிதாக அக்னிபத் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். நாடு காவிமயகமாக மாற்ற முயற்சி நடக்கிறது. 4 வருடங்கள் ராணுவத்தில் சேர்ந்து இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ் பக்கம் மாற்றவேண்டும் என்று மோடி முயற்சி செய்கிறார் என குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்

OPS vs EPS : இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த தேனி மாவட்ட நிர்வாகிகள்..! சொந்த கோட்டையே ஓபிஎஸ்சை கைவிட்ட பரிதாபம்..