Asianet News TamilAsianet News Tamil

பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்ப்பதா.? மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ்

எஸ்பிஐ மற்றும் எல்ஐசியில் உள்ள பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்த்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்

Congress party protests in Coimbatore to condemn the central government
Author
First Published Feb 6, 2023, 1:24 PM IST

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்

எஸ்பிஐ மற்றும் எல்ஐசி யில் உள்ள பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு மோடி அரசு தாரை வார்த்ததாக கூறியும், மத்திய அரசை கண்டித்தும் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ பிரதான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்  காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.அதானிக்கும், அம்பானிக்கும் எல்ஐசி சொத்துக்களை விற்கக் கூடாது,  நடுத்தர வர்க்கத்தினர் சேமித்த பணத்தை கொடுக்க கூடாது, கார்ப்பரேட் முதலாளிகளை வளர்க்கக்கூடாது என்ற கோரிக்கையோடு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். 

ஈரோடு இடைத்தேர்தல்.! ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் திடீர் வாபஸ்..! பின்னனி என்ன.?

இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கருப்புசாமி, எஸ்பிஐ மற்றும் எல்ஐசி யில் பொதுமக்களின் முதலீடுகளை, மோடியின் நண்பர்களான அதானிக்கும் அம்பானிக்கும் மோசடியாக அவர்களது நிறுவனங்களில் முதலீடு செய்வதாக தெரிவித்தார். பிற்காலத்தில் அந்தக் கடனை வராத கடனாக மாற்றி வைப்பதற்காக இந்த மோசடி நடைபெற்றதாகவும்  குற்றம்சாட்டினார். பொதுமக்களின் பணத்தை அபகரிக்கும் பிரதமர் மற்றும் மந்திரி சபையின் கூட்டு மோசடியை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நீட் என்ன ஆச்சு.? எய்ம்ஸ் கட்டியாச்சா.? மதுரைக்கு வரும் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய ஆர்பி.உதயகுமார்

Follow Us:
Download App:
  • android
  • ios