உண்மைக்கு இடையூறு ஏற்படுத்தலாம்; ஆனால் தோற்கடிக்க முடியாது என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்கட்சி  மாநிலதலைவரும் துணை முதல்வருமான சச்சின் பைலட் நேற்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் குடும்பத்திற்கு திரும்பி வர வேண்டும் என்று சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் இன்று மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.


 
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜீவாலா செய்தியாளர்களிடம் பேசும் போது.. "சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர் எம்.எல்.ஏ.க்களை கூட்டாளர்கள் மீண்டும் காங்கிரசிற்கு திரும்ப வேண்டும் என்று கட்சி விரும்புகிறது.


கடந்த ஐந்து நாட்களில், காங்கிரசின் உயர் தலைமை எப்போதும் சச்சின் பைலட்டுடன் திறந்த மனதுடன் பேசத் தயாராக இருந்தது. சச்சின் பைலட்டை தொடர்பு கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டஜன் கணக்கான முயற்சிகள் மேற்கொண்டனர். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உங்களுக்கு வழங்கும் விருந்தோம்பலை மறுத்துவிடுங்கள். சச்சின் பைலட் முகாம் தற்போது ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஐடிசி கிராண்ட் ஹோட்டல் மற்றும் லெமன் ட்ரீ ஹோட்டலில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம் கலைந்து மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சுர்ஜீவாலா.மதில்மேல் பூனையாக காத்திருக்கிறார் சச்சின் பைலட்.