Asianet News TamilAsianet News Tamil

“அந்த பயம் இருக்கட்டும்..” எப்படி தடுத்து நிறுத்தினோம்..! மோடியை சீண்டிய ஜோதிமணி !

ஜனவரி 12ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் மோடி பொங்கல் விழா நடைபெறவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்விட்டரில் பிரதமர் மோடியை தாக்கி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Congress mp jothimani tweet about pm modi came in madurai pongal festival function
Author
Tamilnadu, First Published Jan 7, 2022, 10:22 AM IST

தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு, கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 12-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்று ஏற்கனவே பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. 

Congress mp jothimani tweet about pm modi came in madurai pongal festival function

'மோடி பொங்கல்' விழா இந்த விழாவுக்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இந்த விழாவை தொடர்ந்து தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பாஜக சார்பில் ஜனவரி 12-ம் தேதி 'மோடி பொங்கல்' விழா மதுரையில்நடைபெறவுள்ளதாகவும் தமிழக பாஜக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. பாஜகவினர் ஏற்பாடு 10 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கல் வைப்பதற்கும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பாஜகவினர் ஏற்பாடு செய்து வந்தனர். 

மதுரை பொங்கல் விழாவில் பங்கேற்கும் மோடி, தமிழில் சில நிமிடங்கள் பேச இருப்பதாகவும், அதற்காக அவர் பயிற்சி எடுத்து வருவதாகவும் பாஜகவினர் தரப்பில் கூறப்பட்டு வந்தது. திடீரென நிகழ்ச்சி ஒத்திவைப்பு இந்த நிலையில் மதுரையில் ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.

 

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வந்த பிறகு எதிர்நின்று திரும்பிப்போக வைப்பது ஒரு விதம்.வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம்.தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்’ என்று பிரதமர் மோடியை சீண்டும் விதமாக பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios