Asianet News TamilAsianet News Tamil

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு... சபாநாயகருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Congress MLAs meet with speaker
Author
Chennai, First Published Dec 3, 2018, 12:39 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக வரலாறு காணாத சேதத்தை டெல்டா மாவட்டங்கள் சந்தித்துள்ளன. இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் சில இடங்களில் நிவாரணப் பொருட்கள் சரிவர வந்து சேரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. Congress MLAs meet with speaker

கஜா புயலில் இருந்து மீண்டும் வரும் டெல்டா விவசாயிகள் தலையில் பேரிடி விழுந்துள்ளது. மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

 Congress MLAs meet with speaker

இந்நிலையில் கஜா புயல் நிவாரணம் முறையாக வழங்கவும், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை கூட்டவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் மற்றும் சபாநாயகர் தனபாலை சந்தி்த்து கோரிக்கை விடுத்துள்ளனர்.  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியத்தையும் புயல் நிவாரண நிதிக்காக முதல்வரிடம் வழங்கியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios