congress mla take office

கர்நாடகாவில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவை கொண்டுள்ள மஜத - காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை அழைத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெறும் 104 எம்எல்ஏக்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு எடியூரப்பா கர்நாடக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றார். தனிபெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சியமைத்தது.

இதனை எதிர்த்து மஜத- காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட்து. இதற்காக விதான் சவுதா பகுதியில் 144 தடை உத்தரவுபோடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதனையடுத்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் எல்லோருக்கும் தற்காலிக சபாநாயகர் கே.ஜி. போப்பையா பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். இதற்காக பெங்களூர் ஹில்டன் ஹோட்டலிருந்து காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் புறப்பட்டு சட்டமன்றத்துக்கு வந்து சேர்ந்தனர்.