Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி ஒரு டெங்கு கொசு: காங்கிரஸ் எம்எல்ஏவின் அடாவடி பேச்சு!

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் பிரணீதி ஷிண்டே. இவர், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாபூர் தொகுதியின் சார்பாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பதவி வகித்து வருகிறார். 

congress mla praneethi shidea criticize the modi is dengue mosquito
Author
Chennai, First Published Oct 29, 2018, 11:19 AM IST

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் பிரணீதி ஷிண்டே. இவர், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாபூர் தொகுதியின் சார்பாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், சோலாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பிரணீதி ஷிண்டே பேசியுள்ளார். அப்போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெங்கு கொசு என்று காட்டமாகச் சாடியுள்ளார். 

congress mla praneethi shidea criticize the modi is dengue mosquito

அவர் இதுபற்றி பேசியதாவது: 

இந்த நாட்டில் புதியதாக ஒரு டெங்கு கொசு உலா வருகிறது. அந்த டெங்கு கொசுவின் பெயர் நரேந்திர மோடி. அது நாட்டு மக்கள் எல்லோரையும் உடல் சுகவீனமாக்கி மாற்றியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில், பாஜக.,வுக்கு எதிராக ஓட்டு போட்டு, அந்த டெங்கு கொசுவை மக்களாகிய நீங்கள் அகற்ற வேண்டும். 

இவ்வாறு பிரணீதி ஷிண்டே பேசியுள்ளார். 

congress mla praneethi shidea criticize the modi is dengue mosquito
இந்த பேச்சின் இடையே அவர், பாஜக எம்பி., சரத் பான்சோடை ஒரு குடிகாரன் என்றும் விமர்சித்துப் பேசியுள்ளார். 

ஏற்கனவே, சில நாள் முன்பு, சுயேச்சை எம்எல்ஏ.,வும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் மோடியை ஒரு நம்பிக்கை துரோகி என்று விமர்சித்துள்ளார்.  

congress mla praneethi shidea criticize the modi is dengue mosquito

பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை, மகாராஷ்டிராவில் பாதுகாப்பதாக, பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடக்கும் சூழலில், தான் வழங்கிய கோரிக்கையை கண்டும் காணாமல் மோடி கைவிட்டுள்ளார். அவர் ஒரு நம்பிக்கைத் துரோகி என்று, மேவானி குறிப்பிட்டிருந்தார். 

இப்போது பிரணீதி ஷிண்டேவின் பேச்சும், மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதேசமயம், தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகள், மோடியை கீழ்த்தரமாக விமர்சிக்க தொடங்கியுள்ளதாக, பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios